உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் பழையூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்புவனம் பழையூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்புவனம்: திருப்புவனம் யானைச்சாலை ஊரணியில் விடுபட்ட ஆக்கிரமிப்பு நேற்று அகற்றப்பட்டன.யானைச்சாலை ஊரணி கரையில் 40 வருடங்களாக 30க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டதையடுத்து பல முறை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, ஆனால் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. கடந்தாண்டு அக்டோபர் 18ம் தேதி இறுதி கெடு விதித்து பேரூராட்சி நிர்வாகம் 30 வீட்டு கதவுகளில் நோட்டீஸ் ஒட்டியதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.ஆக்கிரமிப்பாளர்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து வீடுகள் மட்டும் அகற்றப்பட்ட நிலையில் மீதியுள்ள வீடுகள் அகற்றப்படவில்லை.நேற்று செயல் அலுவலர் சங்கர்கணேஷ் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், போலீசார் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட 25 வீடுகளை இயந்திரங்கள் மூலம் அகற்றினர். வீடுகளில் குடியிருந்தவர்கள் பொருட்களுடன் ரோட்டோரம் சோகமாக அமர்ந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ