மேலும் செய்திகள்
கண்தான விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு
05-Sep-2025
சிவகங்கை: தேசிய கண்தான விழாவை முன்னிட்டு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் தங்கதுரை, நிலைய மருத்துவர் முகமதுரபி, உதவி நிலைய மருத்துவர் தென்றல், துறை தலைவர் விஜயபாரதி உள்ளிட்ட டாக்டர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மக்களிடம் கண் தானத்தின் முக்கியத்துவம் மற்றும் இறப்பிற்கு பிறகு கண்களை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
05-Sep-2025