உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெற்பயிர் காப்பீட்டில் ஆர்வமில்லாத விவசாயிகள்

நெற்பயிர் காப்பீட்டில் ஆர்வமில்லாத விவசாயிகள்

திருப்புத்தூர்; தொடர் மழையால் விவசாயிகள் நெற்பயிருக்கான காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டாததால் குறைவான விவசாயிகளே காப்பீடு செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் நெற்பயிருக்கான பிரதம மந்திரி வேளாண் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாளாகும். ஏக்கருக்கு ரூ 422 வீதம் விவசாயிகள் பங்காக செலுத்தி அடங்கல், நில ஆவணம், வங்கி விபரங்களுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இரண்டு நாட்களே உள்ள நிலையில் கடந்த ஆண்டை விட விவசாயிகள் குறைவாகவே விண்ணப்பித்துள்ளனர்.போதிய அளவில் மழை பெய்துள்ளதால் பயிர் செழிக்கும் என்ற நம்பிக்கையும், கடந்த சில ஆண்டுகளாகவே காப்பீடுக்கான பலன் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்காததும் பயிர்க்காப்பீட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.கூட்டுறவு வங்கிக் கடன் போன்ற காரணங்களாலே சிலர் காப்பீடு செய்கின்றனர். இதனால் இந்த ஆண்டில் திருப்புத்தூர் வட்டாரத்தில் கடந்த ஆண்டில் 1200 பேர் காப்பீடு செய்த நிலையில் இந்த ஆண்டு நேற்று வரை 400க்கும் குறைவானவர்களே காப்பீடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை