உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தஞ்சாவூர் - மானாமதுரை ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் மரண பள்ளம்

தஞ்சாவூர் - மானாமதுரை ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் மரண பள்ளம்

மானாமதுரை: தஞ்சாவூர், மானா மதுரை ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் மரண பள்ளங்களால் விபத்து அபாயம் தொடர்கிறது.தஞ்சாவூரில் இருந்து மானாமதுரை செல்லும் ரோடு 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவழி சாலையாக மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்த ரோட்டில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் எதிர்புறம் உள்ள மேம்பாலத்தில் இருந்து சிப்காட் பகுதி வரை ரோட்டின் இரு புறங்களிலும் சாய்வாக பெரிய பள்ளங்கள் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்குறிச்சி சிப்காட் மின்வாரிய அலுவலகம் அருகே டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்ததில் 2பேர் பலியாகினர். இதே போன்று இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட கற்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று கல்குறிச்சி விலக்கு ரோடு அருகே கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.ரோட்டின் இரு புறங்களிலும் மிகவும் தாழ்வாக பெரிய பள்ளங்கள் உள்ளதால் ரோடு ஓரங்களில் தடுப்புக் கம்பி அமைக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கல்குறிச்சி விலக்கு ரோடு அருகே குழாய் பதிப்பதற்காகவும் பள்ளம் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் மூடப்படாமல் உள்ளதால் டூவீலரில் செல்பவர்கள் இரவு நேரங்களில் பள்ளங்களில் விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.ஆகவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் இப்பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ