நிதி விழிப்புணர்வு கூட்டம்
திருப்புத்துார்: திருப்புத்துாரில் சமூக பொருளாதார வளர்ச்சி பணிமனையின் கிளை அமைப்பு சார்பில் நிதி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் சாமுண் டீஸ்வரி, கவிஞர் கணேசன் சிறப்பு வகித்தனர். தவிர்க்க முடியாத கடன்கள், அளவோடும் திருப்பிச் செலுத்தும் திட்டமிடலோடும் இருக்கவும், இணைய வழியில் கடன் தருவதாக கூறி மோசடிகள் நடப்பது குறித்தும் விழிப்புணர்வு அளித்தனர். மண்டல மேலாளர் மைதீன், கோட்ட மேலாளர் முருகன், மேலாளர்கள் சுரேஷ், மணி, கிளை மேலாளர் அருண்குமார் பங்கேற்றனர்.