உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில்உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு மாவட்ட மைய அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டதில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாகின. இந்த அலுவலக தரை தளத்தில் ஆய்வுக்கு பயன்படுத்தும் மருந்துகளை பிரிட்ஜில் வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தில் இருந்து அனைத்து ஆவணங்களும் எரிந்து சாம்பலாகின. விபத்தில் பொருட்கள் சேதமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை