உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டாசு கடை லைசென்ஸ் அக்.15க்குள் விண்ணப்பம்

பட்டாசு கடை லைசென்ஸ் அக்.15க்குள் விண்ணப்பம்

சிவகங்கை : தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை கடை அமைக்க லைசென்ஸ் பெற அக்.,15 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை கடைகள் அமைக்க வெடிபொருள் சட்டப்படி அக்., 15 க்குள் இ- சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை கடைக்கான லைசென்ஸ் பெற கடைக்கான திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500 க்கான வங்கி செலான், முகவரிக்காக (பான், ஆதார், ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு), மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் போட்டோக்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அக்., 20க்குள் லைசென்ஸ் பெறுவதற்கான உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை