உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அருளானந்தர் சர்ச்சில் கொடியேற்றம்

அருளானந்தர் சர்ச்சில் கொடியேற்றம்

காரைக்குடி : காரைக்குடியில் உள்ள தேவகோட்டை ரஸ்தா அருளானந்தர் சர்ச் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.புதிய கொடிமரம் புனிதப்படுத்தும் நிகழ்ச்சியும் சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் தேவகோட்டை வட்டார அதிபர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. திருச்செபமாலை, திருப்பலி மற்றும் தேர்ப்பவனி விழா, திருச்சி திருச்சிலுவை சபை ஆரோக்கியசாமி தலைமையில் நடந்தது. இன்று தேவகோட்டை விக்டர் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடைபெறுகிறது. இயக்குனர் லூர்துராஜ் மற்றும் செஞ்சை பங்கு ரஸ்தா இறை மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ