கால்பந்து போட்டி: அழகப்பா அகாடமி வெற்றி
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அகாடமி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றனர். இளையான்குடியில் மதுரை சர்வோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடந்தது. இதில் பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விளையாடினர். காரைக்குடி அழகப்பா அகாடமி மாணவர்கள் அணியினர், 12 மற்றும் 19 வயதுக்குட்பட்ட கால்பந்து போட்டியில், சாம்பியன் பட்டமும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர். பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் ஆனந்த பாலா, ஆசிரியர் டேவிட் மற்றும் வெற்றி பெற்ற வீரர்களை பள்ளி தாளாளர் ராமநாதன் வைரவன் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் பாராட்டினர்.