மேலும் செய்திகள்
மாணவர்கள் சங்கமம்
28-Dec-2024
திருப்புத்துார்; திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லூரியில் வணிகவியல் படித்த பழைய மாணவர்கள் 44 ஆண்டுக்கு பின் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.இங்கு 1978- முதல் 81 ம் ஆண்டு வரை பி.காம்.,(வணிகவியல்) படித்த மாணவர்கள் 44 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்க முடிவெடுத்தனர். அதில் முன்னாள் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்புச்செல்வம், வங்கியாளர் தங்கராஜ், அலுவலர் இளங்கோ ஆகியோர் பழைய மாணவ நண்பர்களை ஒருங்கிணைத்தனர்.இவர்களில் வங்கி,வழக்கறிஞர், ஆடிட்டர், காப்பீடு துறைகளில் பணியாற்றும் பலரும் சேர்ந்து நேற்று கல்லூரி வளாகத்தில் சந்தித்தனர்.வகுப்பறைகளுக்கு சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரி ஆட்சிக்குழு துணை தலைவர் நா.ராமேஸ்வரன் வரவேற்றார்.துணை முதல்வர் அழகப்பன், பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கல்லுாரி அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
28-Dec-2024