அலவாக்கோட்டையில் நாளை இலவச மருத்துவ முகாம்
சிவகங்கை: அலவாக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நாளை (ஜன.3) காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் மருத்துவ முகாமில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகளிர், குழந்தைகள் நல மருத்துவம் உட்பட 17 விதமான சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாடு சிகிச்சை அளிக்கப்படும். டாக்டர்கள் பரிந்துரைப்படி எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., எக்கோ பரிசோதனை இலவசமாக செய்யப்படும். மேலும் மருத்துவ காப்பீடு அட்டை பெற விரும்புவோர் விண்ணப்பத்துடன், ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., வழங்கும் ரூ.1.20 லட்சத்திற்கான ஆண்டு வருமான சான்றுடன் வந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.