உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பிள்ளையார்பட்டியில் இலவச தொழிற்பயிற்சி

 பிள்ளையார்பட்டியில் இலவச தொழிற்பயிற்சி

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி பி.என்.பி.உழவர் பயிற்சி மையத்தில் நடத்தப்படும் இலவச தொழில் பயிற்சியில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் பயிற்சியாக டிச.9ல் பினாயில், சோப்பு ஆயில், சோப்பு பவுடர் தயாரித்தல், டிச.10ல் காளான் வளர்ப்பு பயிற்சி, டிச.16ல் உணவு பொருட்கள் உரிமம்,லேபிளிங், பேக்கேஜிங் பயிற்சி, டிச.17ல் இயற்கை வேளாண்மை, பூச்சிக்கட்டுப்பாடு, டிச.20ல் இருமடங்கு தென்னை சாகுபடி, டிச.23ல் நிலக்கடலை சாகுபடி அதிக மகசூல் பெறும் வழி, டிச.24ல் தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெறும். இரு நாள் பயிற்சியாக டிச.11ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், வாட்ஸ் அப் மூலம் சந்தைப்படுத்துதல், டிச.18ல் சிறுதானியத்தில் குக்கீஸ்,கேக் தயாரித்தல், டிச.19ல் சிறுதானிய தின்பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறும். மூன்று நாள் பயிற்சியாக டிச.16ல் ப்ரூச் ஒர்க் பயிற்சியும், ஒரு வாரப்பயிற்சியாக டிச.8ல் ஆரி ஒர்க் பயிற்சி நடைபெறும். பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் உழவர் பயிற்சி மைய எண்: 94885 75716ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ