உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கார்த்திக்கை கொல்ல காரில் சுற்றிய கும்பல்: ஆள் தெரியாததால் ஓட்டம்

கார்த்திக்கை கொல்ல காரில் சுற்றிய கும்பல்: ஆள் தெரியாததால் ஓட்டம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு வைகை ஆற்றுப்பாலம் அருகே காரை வைத்து சிலர் மீது ஏற்ற முயன்ற கும்பல் அடிபட்டு விழுந்தவரை பார்த்து அந்த கார்த்தி இல்லைடா என கூறி காரில் ஏறி பறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு மதுரை பதிவு எண் கொண்ட கார் வைகை ஆற்றுப்பாலத்தில் முன்னே டூவீலரில் சென்ற மடப்புரம் கோயில் ஊழியர் கார்த்திக் மீது மோதியது, தடுமாறி கீழே விழுந்த கார்த்திக்கை அருகில் வந்து பார்த்த கும்பல், 'டேய் அந்த கார்த்திக் இல்லடா' எனக்கூறி காரில் ஏறி பறந்து விட்டனர். காரில் வந்த கும்பல் கார்த்திக் என்பவரை தேடி வந்துள்ளதாக தெரிகிறது. அடையாளம் தெரியாமல் கோயில் ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கோயில் ஊழியர் கார்த்திக் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் சாட்சிகளாக உதவி கமிஷனரின் கார் டிரைவர் கார்த்திக்வேலு, அலுவலக ஊழியர் கார்த்திக்ராஜா ஆகியோர் உள்ளனர். அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் பெயரும் கார்த்திக்ராஜா தான். தி.வடகரையில் கலாம் கார்த்திக் என்பவர் அரசு திட்டங்களில் நடந்து வரும் முறைகேடுகளை ஆர்.டி.ஐ.,யின் மூலமாக கேட்டு வாங்கி வெளியிட்டு வருகிறார். எனவே காரில் வந்த கும்பல் எந்த கார்த்தியை தேடி வந்தது என தெரியவில்லை. இச்சம்பவத்தை சாதாரணமாக நினைக்காமல் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை