உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள்; கிராம மக்கள் பாதிப்பு

கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள்; கிராம மக்கள் பாதிப்பு

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பாசனக் கண்மாயில் கொட்டப்படும் குப்பைகளால் தண்ணீர் மாசுபட்டு கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் ஊராட்சிக்கான குப்பைக் கிடங்கு அண்ணா நகர் அருகேயுள்ள பீச்சங்கண்மாயில் அமைக்கப்பட்டுள்ளது. பாசன கன்மாய்க்குள் குப்பைக் கிடங்கு அமைக்க அப்பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. தற்போது ஊராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக கையாளாமல், ஊழியர்கள் இக்கண்மாய் தண்ணீரில் கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர்.அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் சேரும் இறைச்சி கழிவுகளும் கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் கழிவுகள் வீடுகள் முன்பாக தேங்கி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது.மேலும் குப்பையுடன் ரசாயனக் கழிவுகளும் கலப்பதால் இக்கண்மாயின் ஆயக்கட்டு பாசன நிலங்களும் மாசுபடுகிறது. எனவே நிரந்தர தீர்வாக கண்மாய்க்குள் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை