உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ்- டூவீலர் மோதி விபத்து: 3 பேர் காயம்

அரசு பஸ்- டூவீலர் மோதி விபத்து: 3 பேர் காயம்

சிவகங்கை, : காளையார்கோவில் அருகே முத்துார் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் அரவிந்த் 30. இவர் நேற்று காலை 11:30 மணிக்கு தாய் விஜயராணி 50, உறவினர் பாப்பா 60 ஆகியோரை டூவீலரில் ஏற்றிக்கொண்டு சிவகங்கை வந்தார். மதுரையில் இருந்து ஆர்.எஸ்., மங்கலம் சென்ற அரசு பஸ் இவர்கள் வந்த டூவீலரில்மோதியதில் இதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை