மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை சங்க ஆண்டு விழா
13-Sep-2025
சிவகங்கை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 25 மாத கால பணி ஓய்வு பலன்களை வழங்காத அரசை கண்டித்து, சிவகங்கை மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கலைச்செல்வி, மகளிர் அமைப்பாளர் லதா, மாநில செயற்குழு கோபால், மாவட்ட துணை தலைவர் பாண்டி, இணை செயலாளர் சின்னப்பன், பயாஸ் அகமது, ராஜா முகமது ஆகியோர் பங்கேற்றனர். மானாமதுரையில் தலைவர் சிவக்குமார், செயலாளர் ராஜேஸ்வரன் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் தனபால் தலைமை வகித்தார். சிங்கம்புணரியில் ேஷக் அப்துல்லா, சாக்கோட்டையில் சிவா, திருப்புத்துாரில் சின்னையா, திருப்புவனத்தில் சுஜாதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், சத்துணவு ஓய்வூதியர் சங்க செயலாளர் நடராஜன், பிற்பட்டோர் நலத்துறையினர் பங்கேற்றனர்.
13-Sep-2025