உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு இல்லம் திட்ட வீடு கட்டுவதற்கு எனக்கூறி கிராவல் வெட்டி கடத்தல்

அரசு இல்லம் திட்ட வீடு கட்டுவதற்கு எனக்கூறி கிராவல் வெட்டி கடத்தல்

மானாமதுரை : மானாமதுரை அருகே சன்னதிபுதுக்குளம் ஊராட்சியில் அரசின் வீடு திட்டத்திற்கு எடுப்பதாக கூறி, கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். சன்னதிபுதுக்குளம் ஊராட்சியில் சர்க்கஸ் கலைஞர்களுக்கென அரசின் வீடு திட்டத்தில் 11 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளுக்கான தரைத்தளம் அமைக்க 55 யூனிட் கிராவல் மண் தேவைப்பட்டுள்ளது. இதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனுமதி பெற்று, மணல் அள்ளி 11வீடுகளில் கொட்டியுள்ளனர். இதற்காக 55 யூனிட் கிராவல் மண் மட்டுமே எடுக்க அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், விதியை மீறி அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி கடத்தி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அனுமதியை மீறி கிராவல் மண் கடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது, வருவாய்துறை அலுவலர்கள் முன்னிலையில் அனுமதி பெற்ற 55 யூனிட் மட்டுமே கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது. வணிக நோக்கில் கிராவல் மண் எடுக்கவில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை