உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நலம் காக்கும் திட்டம் துவக்கம்

நலம் காக்கும் திட்டம் துவக்கம்

கீழச்சிவல்பட்டி,: முதல்வரால் காணொளி மூலம் துவக்கப்பட்ட நலம் காக்கும் முதல்வர் திட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை, மாவட்டத்தில் திருப்புத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா, மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தாசில்தார் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகளும், பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எக்கோ, எக்ஸ்-ரே, ஸ்கேன்,கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர். காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை