உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுவயலில் ரூ.12 லட்சத்தில் கட்டிய சுகாதார வளாகம்

புதுவயலில் ரூ.12 லட்சத்தில் கட்டிய சுகாதார வளாகம்

காரைக்குடி -: புதுவயல் பேரூராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், மக்கள் பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடக்கிறது. புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 9வது வார்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2012 -- 13ம் ஆண்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாமல் பூட்டிக் கிடக்கிறது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சுகாதார வளாகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்பகுதி மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், புதிதாக கட்டி பல மாதங்களாக பூட்டி கிடப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை