உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் மூடப்பட்ட சுகாதார வளாகம்: பயணிகள் பாதிப்பு

தேவகோட்டையில் மூடப்பட்ட சுகாதார வளாகம்: பயணிகள் பாதிப்பு

தேவகோட்டை: தேவகோட்டையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டும் பயன்பாடில்லாததால் பூட்டப்பட்டு கிடப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.தேவகோட்டையின் முக்கிய பகுதி ராம்நகர்.இங்கு கோர்ட்,சப் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் என அனைத்து முக்கிய அலுவலகங்களும் இங்கு உள்ளது. அலுவல் பணிக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் ராம்நகர் வருகின்றனர்.வெளியூரிலிருந்து வரும் பெண்கள் இயற்கை உபாதைகளை நிறைவேற்ற அவதிப்பட்டனர். 2017 ம் ஆண்டில் நகராட்சி பொது நிதியில் பஸ் ஸ்டாப் அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் சில மாதங்களே செயல்பட்டது. நகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நகராட்சியினர் இதை மூடிவிட்டனர். தற்போது வெளியூர் வாசிகள் இயற்கை உபாதை கழிக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !