உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமச்சாலையில் வேகமாக செல்லும் கனரக லாரிகள்

கிராமச்சாலையில் வேகமாக செல்லும் கனரக லாரிகள்

மானாமதுரை: மானாமதுரை அருகே அன்னவாசல் செல்லும் ரோட்டில் அதிவேகமாக செல்லும் கனரக லாரிகளால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மானாமதுரையில் இருந்து வளநாடு, அன்னவாசல்,புதுார்,கரிசல்குளம்,தேளி,கொட்டகாட்சியேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி செல்லும் ரோட்டில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த ரோடு போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலானதை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடு போடப்பட்டது. கடந்த சில வாரங்களாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதிகளில் உள்ள கிரஷர் கம்பெனிகளில் இருந்து முண்டு, ஜல்லி கற்கள் மற்றும் எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கனரக லாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக கொண்டு செல்வதால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ