மேலும் செய்திகள்
இளையான்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
22-Nov-2024
மானாமதுரை: மானாமதுரை அருகே தேவரேந்தலில் மாணவர்கள்,பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்ணீரை கடந்து செல்வதால் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து இடது பிரதான கால்வாய் மூலம் மானாமதுரை அருகே உள்ள நெட்டூர் கண் மாய்க்கு தண்ணீர் சென்று அங்கிருந்து காக்குடி கண்மாய் நிரம்பி அதன் பிறகு இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.இந்நிலையில் காக்குடி கண்மாய் கலுங்கை முறையாக பராமரிக்காததாலும் சேதமடைந்துள்ளதாலும் அதன் வழியாக வெளியேறும் தண்ணீர் ரோட்டை கடந்து வருகிறது.இந்த ரோட்டில் தேவரேந்தல் பகுதியில் இருந்து மேலநெட்டூர் கிராமத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில பயணிக்கின்றனர்.மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஏதேனும் பலி ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
22-Nov-2024