உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போஸ்டர்களால் வீணாகும் நெடுஞ்சாலைத்துறை பாலம்

போஸ்டர்களால் வீணாகும் நெடுஞ்சாலைத்துறை பாலம்

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே மேம்பாலத்தில் அரசியல் கட்சியினர் தங்களின் பிளக்ஸ் பேனர்களை இரும்பு ஆணி அடித்தும், தொடர்ந்து போஸ்டர் ஒட்டும் இடமாக்கி வருகின்றனர். சிவகங்கை நகரில் 2012ம் ஆண்டு ரயில்வேதுறை, தமிழக அரசு இணைந்து மேம்பாலம கட்டி பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலம் பயன் பாட்டிற்கு வந்து 10 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த பாலத்தை நெடுஞ்சாலை துறை பராமரித்து வருகிறது. பாலத்தின் இரண்டு புறத்திலும் உள்ள தடுப்பு சுவரில் சில அரசியல் கட்சிகள் தங்களின் பிளக்ஸ்பேனர்களை பெரிதாக அடித்து அவற்றை இரும்பு கம்பி மற்றும் ஆணிகள் அடித்து வைத்துள்ளனர். பாலத்தின் அனைத்து பகுதியிலும் ஒரு இடம் விடாமல் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இவர்களை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி