மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
13-Jun-2025
சிவகங்கை; நெடுஞ்சாலைத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கை நெடுஞ்சாலை கோட்டபொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ்சாலை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். இணை செயலாளர் வினோத்குமார் வரவேற்றார். வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சேகர், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன், பிற்பட்டோர் நல விடுதி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோபால், செயலாளர் இளையராஜா, சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட பொருளாளர் முத்தையா, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க நிதி காப்பாளர் நடராஜன் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முத்துசெல்வம் நன்றி கூறினார்.
13-Jun-2025