ஹிரோசிமா - நாகசாகி நினைவு ஓவிய போட்டி
தேவகோட்டை: தேவகோட்டையில் ஹிரோசிமா - நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடந்தது. நடையாளர் சங்க தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். லயன்ஸ் பட்டய தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் போட்டியை துவக்கிவைத்தார். போட்டியில் எல்.கே.ஜி., முதல் 10 ம் வகுப்பு மாணவர்கள் என 2,480 பேர் வரை பங்கேற்றனர். டி.எஸ்.பி., கவுதம் சிறப்பு வகித்தார். நடையாளர் சங்க செயலாளர் குருசாமி, லயன்ஸ் தலைவர் மதன்குமார், காஸ்மாஸ் தலைவர் மலைராஜன், செயலாளர் நிட்டல்ராஜன், டால்பின் பள்ளி தாளாளர் ராஜன், தலைமைஆசிரியர் புகழேந்தி பங்கேற்றனர். //