உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பூலாங்குறிச்சி; திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதுவரை இடைக்கால ஊதியமாக யுஜிசி பரிந்துரைத்த ரூ 57,500 வழங்க வேண்டும் ஆகிய இரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ