உள்ளூர் செய்திகள்

மனித நேய வார விழா

தேவகோட்டை : சருகணி இதயா மகளிர் கல்லூரியில் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் உரிமைகள் பிரிவு, திருவேகம்பத்துார் போலீசார் இணைந்து மனித நேய வார விழாவை நடத்தினர். சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளர் பாலசிங்கம் தலைமை வகித்தார். குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இருதயம் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மனித பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். மாவட்ட சிறப்பு வக்கீல் பிரதீப் குமார், மாவட்ட நலக் குழு உறுப்பினர் பூமிநாதன், பேராசிரியை லிபோமேரி, மாணவி ஷாலினி, எஸ்.ஐ. வினோத், எஸ்.ஐ. தமிழ்ச்செல்வி, எஸ்.எஸ்.ஐ.க்கள் வளர்மதி, பிரேமலதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ