இடைக்காடர் ஜெயந்தி விழா
மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூர் சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக் காடர் கோயிலில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு பூஜை, சுவாமி வீதி உலாவும் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கோ, பரி, ஆடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.