உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தனியார் நன்கொடையாளர்கள் மூலம் கேமராக்கள் நிறுவ யோசனை

தனியார் நன்கொடையாளர்கள் மூலம் கேமராக்கள் நிறுவ யோசனை

திருப்புத்துார் நகர் ஒரு போக்குவரத்து மையமாகும். திருப்புத்துாரிலிருந்து மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கல்லல், பொன்னமராவதி, சிவகங்கைக்கு ரோடுகள் செல்கின்றன.மேலும் திருப்புத்துார் நகரைச் சுற்றிலும் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையும் செல்கிறது.நகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் வாகனம் மூலம் இந்த சாலை வசதியை பயன்படுத்தி விரைவாக தப்பிச் செல்ல முடிகிறது.குறிப்பாக திருட்டு, நகை,வழிப்பறி சம்பவங்களில் இது தெரிய வந்துள்ளது. நகரின் முக்கிய சாலை சந்திப்புக்களில் 24 மணி நேர கண்காணிப்பை உறுதி செய்ய கேமரா கண்காணிப்பு அவசியமாகிறது. கடந்த சில ஆண்டுகளாக நகரின் முக்கிய இடங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் போலீசார் கேமரா மூலம் கண்காணிப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.அது போல சில தனியார் நிறுவனங்கள், பெரிய கட்டடங்களிலும் கேமரா நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் அண்மைகாலமாக குற்றச்சம்பவங்களில் கேமராக்களின் பதிவால் குற்றவாளிகள் சிக்கிய அனுபவத்தை அடுத்து கூடுதலாக கேமரா வசதி ஏற்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அதற்கு போதிய நிதி வசதியின்றி தாமதமாகிறது. தனியார் உதவியைத் நாட வேண்டியுள்ளது.குறிப்பாக மதுரை ரோட்டில் கல்லுாரிக்கு அருகில், சிவகங்கை ரோட்டில் புறவழிச்சாலை சந்திப்பு, சிங்கம்புணரி முக்கு, கண்டவராயன்பட்டி ரோடு சந்திப்பு, புதுக்கோட்டை ரோடு புறவழிச்சாலை சந்திப்பு, தம்பிபட்டி, தென்மாப்பட்டு புறவழிச்சாலை சந்திப்பு, புதுத்தெரு ரோடு சந்திப்பு என்று பல இடங்களில் கேமரா கண்காணிப்பு அவசியமாகும்.போலீசார் நகரின் சாலைகளை முழுமையாக ஆய்வு செய்து கேமரா பொருத்த தேவையான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும் தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமரா செயல்பாட்டையும் கண்காணித்து தேவைப்பட்டால் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.இன்ஸ்பெக்டர் கலைவாணி கூறுகையில், நகரின் முக்கிய ரோடுகளில் தற்போது போலீஸ் மற்றும் தனியார் நிறுவனங்களின் கேமராக்கள் 93 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக 16 இடங்களை தேர்வு செய்து அதில் கேமராக்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நன்கொடையாளர்கள் மூலம் கேமராக்கள் நிறுவப்படும். பொதுமக்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் சொந்தமாகவோ, அப்பகுதியினர் சேர்ந்தோ கேமராக்களை நிறுவுவதன் மூலம் கூடுதல் கண்காணிப்பும், பாதுகாப்பும் ஏற்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ