உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி கிராமங்களில் குடிநீர் சப்ளை இல்லை; வால்வில் கசியும் நீரை காத்திருந்து சேகரிக்கும் மக்கள்

இளையான்குடி கிராமங்களில் குடிநீர் சப்ளை இல்லை; வால்வில் கசியும் நீரை காத்திருந்து சேகரிக்கும் மக்கள்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட 55 ஊராட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு திருச்சியிலிருந்துராமநாதபுரம் வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருடங்களுக்கும் மேலாகிவிட்ட காரணத்தினால் குடிநீர் திட்ட குழாய்கள் ஆங்காங்கே உடைந்து கிராம பகுதிகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் இல்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக சிறுபாலை கிராமத்தை ஒட்டிய கிராம மக்கள் நீண்ட நாட்களாக குடிநீர் வராத காரணத்தினால் அங்கிருந்து 3 கி.மீ., துாரமுள்ள வாணி கருப்பணசாமி கோயில் அருகே குடிநீர் குழாய் வால்வுகளில் கசியும் நீரை சேகரித்து வருகின்றனர்.சிறுபாலை கிராம மக்கள் கூறியதாவது: காவிரி கூட்டு குடிநீர்15 நாட்களுக்கு ஒரு முறை வந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் வராத காரணத்தினால் அவதிப்பட்டு வருகிறோம். வால்வுகளில் கசியும் நீரை தான் காத்திருந்து பிடித்து வருகிறோம். இந்த தண்ணீரும் கிடைக்காத காலங்களில் வண்டிகளில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி வருகிறோம். மாவட்ட நிர்வாகம்இளையான்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீரை சரியான முறையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி