உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாந்தகுடிபட்டியில் புரவியெடுப்பு விழா

மாந்தகுடிபட்டியில் புரவியெடுப்பு விழா

எஸ்.புதுார் : எஸ்.புதுார்அருகே மாந்தகுடிபட்டியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு திருவிழா நடக்கும். இந்தாண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டு கிராம மந்தையில் வைத்து புரவிகள் செய்யப்பட்டன. நேற்று சிறப்பு வழிபாட்டுக்கு பின் அரண்மனை புரவிகள் முன்னே செல்ல, நேர்த்திக்கடன் புரவிகள் தொடர்ந்து சென்றன. விநாயகர் கோயிலில் கிராமத்தினர் சார்பில் புரவிகளுக்கு மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வட்டக்குரை இடத்தில் புரவிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்து அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலுக்கு அனைத்து புரவிகளும் கொண்டுசெல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி