மேலும் செய்திகள்
மானாமதுரை நான்குவழிச்சாலையில் ஆக்கிரமிப்பு
06-Dec-2024
மானாமதுரை : மானாமதுரை அருகே முத்தனேந்தலில் கடந்த 6 ஆண்டாக சர்வீஸ் ரோடு முழுமை பெறாத காரணத்தினால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச்சாலையாகவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் நான்கு வழி சாலையை ஒட்டி இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இங்கு சர்வீஸ் ரோடு முழுமையாக போடவில்லை. இதனால் இந்த ரோட்டில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. சர்வீஸ் ரோடு இன்றி முத்தனேந்தல் கிராமத்திற்கு வர வேண்டிய அரசு பஸ்கள் 4 வழிச்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று விடுகின்றன. இந்த சர்வீஸ் ரோட்டிலிருந்து கட்டிக்குளம் மற்றும் இடைக்காட்டூர் செல்லும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே முத்தனேந்தலில் முழுமை பெறாத சர்வீஸ் ரோட்டினை அமைத்து கொடுக்க வேண்டும்.
06-Dec-2024