உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திருப்புத்துார்: விடுமுறை தினங்களில் பிள்ளையார்பட்டிக்கு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள்வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தின் பிரபலமான ஆன்மிகத் தலமாக பிள்ளையார்பட்டி உள்ளது. பக்தர்கள் கற்பகவிநாயகரை தரிசித்து செல்கின்றனர்.துவக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பின்னர் சதுர்த்தி விழா, சுபதினங்கள், சங்கடஹர சதுர்த்தி தினங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது.தற்போது வழக்கமான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் எந்த விடுமுறை தினமானாலும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பள்ளி விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. தனியார் தங்குமிட பணியாளர் கூறுகையில், விடுமுறை தினங்கள் என்றாலே அறைகள் பெரும்பாலும் புக் ஆகி விடுகிறது. தற்போது 'பேக்கேஜ் டூர்' ஆக பக்தர்கள் வருகின்றனர்.அதில் பிள்ளையார்பட்டியுடன் அருகிலுள்ள பல ஆன்மிக தலங்களுக்கும் செல்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை