பாலிதீன் பை பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் புகார்
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளன. கடந்த 2019 ல் எளிதில் மக்காத பிளாஸ்டிக் வகைகளை சேர்ந்த 14 விதமான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி அரசு மருத்துவமனை வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் பாலித்தீன் பை, டீக்கடைகளில் பாலித்தீன் பைகளில் டீ வழங்குதல், சாப்பாடு பொருட்களை வழங்குதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை வளாக பகுதிகளில் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் தேங்கி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.