சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. * சிவகங்கை தினமலர் கிளை அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. ஊழியர்கள் பங்கேற்றனர். * சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொற்கொடி கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், எஸ்.பி., சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், செந்தில் நாதன் எம்.எல்.ஏ., கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த் பங்கேற்றனர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன் னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 300க்கும் மேற்பட்ட போலீசார், வருவாய் உட்பட பல்வேறு துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினர். பின்னர் காந்தி, வேலுநாச்சியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். * சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் டீன் சீனிவாசன் கொடியேற்றினார். நிலைய மருத்துவ அலுவலர் (பொறுப்பு) முகமது ரபிக், உதவி மருத்துவ அலுவலர் தென்றல், கல்லுாரி துணை முதல்வர் விசாலாட்சி உட்பட பேராசிரியர், மாணவர்கள், மருத்துவமனை ஊழி யர்கள் பங்கேற்றனர். * சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி யில் முதல்வர் ஆண்டனி டேவிட்நாதன் கொடி யேற்றினார். என்.சி.சி., அலுவலர் சதீஷ் கண்ணா, என்.எஸ்.எஸ்., அலுவலர் செல்வவிநாயகம், உடற்கல்வி ஆசிரியர் பால கிருஷ்ணன் பங்கேற்றனர். * காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளி யில் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா கொடியேற்றினார். ஆசிரியர் அரிஸ்டாட்டில் வர வேற்றார். தொடக்க கல்வி அலுவலர் அன்புநாதன் கொடியேற்றினார். சாரண ஆசிரியர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * கீழக்கோட்டை அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியை தெய்வானை கொடியேற்றினார். ஆசிரியர் ஆரோக்கியசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபமாலை மேரி பங்கேற்றனர். * சோழபுரம் ரமண விகாஷ் மேல்நிலை பள்ளி யில் தாளாளர் முத்துக்கண்ணன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் கணேஷ் வரவேற்றார். லயன்ஸ் நிர்வாகிகள் மெய்யப்பன், தண்ணீர்மலை, விஸ்வநாதன், ராம்பிரபாகர், முத்துராஜா பங்கேற்றனர். * சிவகங்கை அரு. நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவநீதம் கொடியேற்றினார். * சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் மனோஜ்குமார் சர்மா வரவேற்றார். ஆசிரியை பிஜித்பத்மா நன்றி கூறினார். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். * கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் அழகப்பன் கொடியேற்றினார். ஆசிரியர் அண்ணாத்துரை சிறப்பு வகித்தார். ஆசிரியர் கண்ணதாசன், பிரபு பங்கேற்றனர். * இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் கொடியேற்றி, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பயிற்சி மைய கமாண்டன்ட், துணை கமாண்டன்ட், வீரர்கள் பங்கேற்ற னர். உணவு பொருட்கள் கண்காட்சி வீரர்களால் நடத்தப்பட்டது. * குன்றக்குடி சண்முக நாத பெருமான் கோயிலில் ஜமாபந்தி நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, வி.ஏ.ஓ., முத்துக்கிளி, ஹிந்து அறநிலைய ஆய்வாளர் பிச்சுமணி பங்கேற்றனர். * சிவகங்கை சாம்பவிகா மேல்நிலை பள்ளி யில் பள்ளி செயலர் சேகர் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் தியாக ராஜன், உடற்கல்வி ஆசிரி யர் தடியப்பன், நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துபஞ்சவர்ணம், பொறுப்பாசிரியர் பாண்டிசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * சிவகங்கை அருகே சக்கந்தி அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் அருள்ராஜ் கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * கீழக்கண்டனி அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துப் பாண்டி கொடியேற்றினார். * சிவகங்கை கே.ஆர்., மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சர வணன் கொடியேற்றினார். * சிவகங்கை 21ம் நுாற்றாண்டு மெட்ரிக் பள்ளி யில் பிளஸ் 2 மாணவி துர்கா கொடியேற்றினார். வழக்கறிஞர் சரவணன் முன்னிலை வகித்தார். பள்ளி அறங்காவலர் ராணிசத்தியமூர்த்தி, முதன்மை முதல்வர் விவேகானந்தன், துணை முதல்வர்கள் அருணாதேவி, கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் நளதம் கொடியேற்றினார். பேராசிரியர் பூங்கொடி உட்பட மாணவிகள் பங்கேற்றனர். * சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அறிவொளி கொடியேற்றினார். மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளி, சார்பு நீதிபதி பாண்டி, ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி அனிதாகிறிஸ்டி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைசாமி, அரசு வழக்கறிஞர் அழகர்சாமி பங்கேற்றனர். * நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் பள்ளி முகவாண்மை குழு தலைவர் கண்ணப்பன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா வரவேற்றார். * தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடு நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் கொடியேற்றினார். ஆசிரி யர் முத்துலட்சுமி வர வேற்றார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. * சிவகங்கை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கொடியேற்றினார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன், கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * சிவகங்கை ஆக்ஸ்வர்டு பள்ளியில் தேசிய படை மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. முன்னாள் ராணுவ வீரர் ஆறுமுகம் அணி வகுப்பை ஏற்றார். முதல்வர் கீதா வரவேற்றார். பள்ளி நிறுவனர் சியாமளா வெங்கடேசன், பள்ளி செயலர் மீனா அனந்தகுமார் முன்னிலை வகித்தனர். பள்ளி சிறப்பு விருந்தினர் பிளே சிடா கலந்து கொண்டார். கலை நிகழ்ச்சி நடந்தது. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. * சிவகங்கை சூரக் குளம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலே ஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலர் மீனா அனந்தகுமார், ராணுவ வீரர் லான்ஸ் நாயக் வி.விஜய் கொடியேற்றினார். முதல்வர் லதா, ஆசிரியர்கள் பங்கேற்றனர். * சிவகங்கை அல் ஹூதா இஸ்லாமிக் சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளியில் சார்ட்டர்ட் இன்ஜினியர் பாரதிதாசன் பங்கேற்றார். பள்ளி செயலர், தாளாளர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். * சிவகங்கை அன்னை வீரமாகாளி அம்மன் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் அசோக்குமார் கொடி யேற்றினார். பெக்கி அசோக்குமார் உரையாற்றி னார். முதல்வர் செல்வமணி நன்றி கூறினார். * சிவகங்கை சாய் பாலமந்திர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நிர்வாகி ஆர்த்தி குமார் வரவேற்றார். ஆசிரியை மீனுப்பிரியா கொடி யேற்றினார். தலைமை ஆசிரியை கோமதி பாலா நன்றி கூறினார். * சிவகங்கை பால முருகன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பள்ளி நிர்வாகி குமார் வரவேற்றார். அட்சயா கொடியேற்றினார். ஆசிரியை ஐஸ்வர்யா நன்றி கூறினார். * மாவட்ட சேவா சமாஜம் பாலர் பாதுகாப்பு விடுதியில் நல்லாசிரியர் பகீதர நாச்சியப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரகுராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட லயன்ஸ் சங்க முன்னாள் மண்டல தலைவர் தங்கமணி கொடியேற்றினார். கண்காணிப்பாளர் ஆண்டாள் நன்றி கூறினார். * சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே., நடுநிலைப்பள்ளி யில் பள்ளி தலைவர் சித்ரா ராஜரத்தினம் கொடியேற்றி னார். பள்ளி செயலர் மற்றும் தலைமை ஆசிரியர் சுரேஷ் ஜான் தாமஸ் உரையாற்றினார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். *சிவகங்கை சக்கந்தி அசிசி நகர் ஸ்ரீசக்தி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் மாரியப்பன் தலைமையில் முதல்வர் மாமுண்டி பிரவீன்ராஜ் முன்னிலையில் விழா நடந்தது. த.வெ.க., தெற்கு மாவட்ட செயலாளர் முத்து பாரதி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொடியேற்றினார். கலை நிகழ்ச்சியும், போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நடந்தது.தலைமை ஆசிரியை உமா தலைமை வகித்தார். ஆசிரியை ரூபா ராணி தொகுத்து வழங்கினார். *சிவகங்கை தமறாக்கி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் உமாராணி வரவேற்றார். ஆசிரியர் சுந்தரகணபதி கொடியேற்றினார். மதகுபட்டி லயன்ஸ் கிளப் பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம், மேலாண்மை குழு தலைவர் மச்சக்காளை, ஆசிரியர் கெப்சின் ரெமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த விழாவில் துணைவேந்தர் க.ரவி கொடியேற்றினார். பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சேகர், ராஜாராம், ஜெயகாந்தன், பதிவாளர் செந்தில் ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி மாநகராட்சி யில் மேயர் முத்துத்துரை கொடியேற்றினார். கமிஷனர் சங்கரன் முன்னிலை வகித்தார். அலுவலகப் பணியாளர்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தாளாளர் சத்தியன் தலைமை ஏற்றார். நிர்வாக இயக்குனர் சங்கீதா முன்னிலை வகித்தார். பள்ளி கல்விசார் இயக்குனர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். துணை முதல்வர் சுபாஷினி வரவேற்றார். முதல்வர் சங்கர சுப்பிரமணி யன் கொடியேற்றினார். காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தஞ் சாவூர் என்.சி.சி., கமாண்டிங் ஆபிசர் கொலோனல் கபில் துலி கொடியேற்றினார். பள்ளி சேர்மன் குமரேசன் தலைமை ஏற்றார். முதல்வர் உஷா குமாரி வரவேற்றார். புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சுவாமிநாதன் கொடியேற்றினார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் வரலாற்று துறை தலைவர் நிலோபர் பேகம் கொடியேற்றினார். காரைக்குடி வித்யகிரி மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஹேமமாலினி கொடியேற்றினார். காரைக்குடி நேஷனல் கல்வி நிறுவனங்களில் நடந்த நிகழ்ச்சியில் தாளாளர் சையது கொடியேற்றினார். காரைக்குடி ஸ்ரீ ராக வேந்திரா மெட்ரிக் பள்ளியில் கமாண்டிங் ஆபீசர் எஸ்.கே மிஸ்ரா கொடியேற்றினார். தலைமையாசிரியர் ராதை வரவேற்றார்.தாளாளர் நாராயணன், செயலாளர் கார்த்திக், முதல்வர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லல் தேவப்பட்டு கல்யாணி கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்மன் அசோகன் கொடியேற்றினார். அமராவதி புதுார் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் செயலர்கள் சாரதேஸ்வரி பிரியா, ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமை ஏற்றனர். மதுரை யூக்யுடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி மண்டல விற்பனை மேலாளர் மெய்யப்பன் கொடியேற்றினார். முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். காரைக்குடி தொழில் வணிகக் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் சாமிதிராவிட மணி கொடியேற்றினார். பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி எஸ்.ஆர்.கேட்டரிங், நர்சிங், தொழிற்பயிற்சி கல்லுாரி மற்றும் ராஜா ஹெரால்டு பள்ளியில் நிர்வாக இயக்குனர் அப்துல் சித்திக் கொடியேற்றினார். தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். *காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லுாரியில், நிர்வாக இயக்குனர் பிரிய தர்ஷினி கொடியேற்றினார். முதல்வர் அருள் வாழ்த்தினார். துணை முதல்வர் நாகநாதன் பேசினார். காரைக்குடி ஸ்ரீ ராஜ ராஜன் சி பி எஸ் சி பள்ளியில் பட்டாலியன் துணை கமாண்டர் மோகன் கொடியேற்றினார். அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பேசினார். முதல்வர் சிவக்குமார், பள்ளி முதல்வர் வடிவாம்பாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்டனூர், பாலையூரில் உள்ள ஏ.பி.ஆர்.பீனிக்ஸ் பப்ளிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம், டாக்டர் பூபதி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமராவதிப்புதூர் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 4வது பட்டாலியன் படை பிரிவில், சீனியர் கமாண்டர் சங்கர் குமார் ஜா தேசியக் கொடி ஏற்றினார். திருப்புத்துார் *திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் பி.டி.ஓ. மு. சத்யன் கொடியேற்றினார். பி.டி.ஓ.,ராஜேந்திரபிரசாத் முன்னிலை வகித்தார். மேலாளர் ரமேஷ்பாபு, ஏ.பி.டி.ஓ.(நிர்வாகம்) அருணா பங்கேற்றனர். *கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மெக்காட்ரானிக்ஸ் துறைத் தலைவர் சுபாகர் வரவேற்றார். முதல்வர் சசிக்குமார் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். *திருப்புத்துார் ஆ.பி.சீ.அ.கல்லுாரியில் முதல்வர் கேஆர்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலர் நா.ஆறுமுகராஜன் கொடியேற்றினார்.பேராசிரியர்(ஓய்வு) பாலசுப்பிர மணயன் பங்கேற்றார். *திருப்புத்துார் ஆ.பி.சீ.அ.கல்வியியல் கல்லுாரி யில் முதல்வர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். செயலர் நா.ராமேஸ்வரன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். * திருப்புத்துார் கிறிஸ்து ராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சிவகங்கை மாவட்ட ஆலோசகர் ரெங்க சாமி கொடி ஏற்றினார்.பள்ளித் தலைவர் விக்டர் தலைமை தாங்கினார். முதல்வர் தபசம் கரீம் வரவேற்றுப் பேசினார். தாளாளர் ரூபன் அறிமுக உரையாற்றினார். * தென்கரை மவுண்ட் சீயோன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசியக் கொடி பற்றிய விளக்கக்காட்சிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் தேசபக்தியை மாணவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. *திருப்புத்துார் ஸ்ரீ முத்தையா மெமோரியல் கல்லுாரியில் தாளாளர் வெளியாரி மு.காசிநாதன் கொடியேற்றினார். முதல்வர் சு.நா.வெங்கடேசன் வாழ்த்தினார். *திருப்புத்துார் ஆறு முகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் கேஆர்.அமுதா வரவேற்றார். தாளாளர் நா.ராமேஸ்வரன் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். *திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய கா.புதுவளவு ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆ.ஜோசுவா அசோக்குமார் வரவேற்றார். கண்டவராயன்பட்டி எஸ்.ஐ.,ஜேக்கப் கொடியேற்றினார். காரைக்குடி குளோபல் மருத்துவமனை தலைவர் டாக்டர் கும ரேசன் பங்கேற்றார். *திருப்புத்துார் பாபா அமீர் பாதூஷா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பாபா அமீர் பாதூஷா தலைமை வகித்து கொடியேற்றினார். துணைமுதல்வர் செ.கனகா வரவேற்றார். * திருப்புத்துார் அரசு மருதுபாண்டியர் நினை வகத்தில் மருதுபாண்டியர் வாரிசுதாரர் த.ராமசாமி தலைமை வகித்தார். தாசில்தார் மாணிக்கவாசகம் கொடியேற்றினார். தொடர்ந்து மருதுபாண்டியர் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் என்.சி.சி. அலுவலர் வில்சன்பிரபாகரன், காகிதம் விநியோகிஸ்தர்கள் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீரையா நன்றி கூறினார். தேவகோட்டை தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கண்ணன் முன்னிலையில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தேசிய கொடி ஏற்றினார். தியாகிகள் பூங்காவில் காங். சார்பில் காங். தலைவர் சஞ்சய் தலைமையில் அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் மீரா உசேன் கொடி ஏற்றினார். சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் கல்லுாரி தலைவர் லட்சு மணன் தலைமையில் முதல்வர் நாவுக்கரசு கொடி ஏற்றினார். என். சி.சி. அதிகாரி லெப்டினன்ட் மாரி தலைமையில் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். ராமகிருஷ்ண நடுநிலைப் பள்ளியில் நிர்வாகி சோம நாராயணன் தலைமையில் காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் மலைராஜன் கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பட்டய தலைவர் தட்சிணாமூர்த்தி, ரெங்கசாமி பங்கேற்றனர். ராம்நகர் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளியில் தாளாளர் விஜயன் தலைமையில் தலைமையாசிரி யர் அமுதா ராணி முன் னிலையில் கவுன்சிலர் பவுல் ஆரோக்கியசாமி கொடி ஏற்றி பரிசுகள் வழங்கினார். என்.எஸ். எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் கொடி ஏற்றினார். பட்டிமன்ற பேச்சாளர் துரைபாண்டியன், குமனன் பேசினர். சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் செயலாளர் கணேசன், பொருளாளர் பெர்டின் சேவியர், பள்ளி முதல்வர் வீரதேவி முன்னிலையில் தேவகோட்டை கிளை மேலாளர் சண்முகசுந்தரம் கொடி ஏற்றினார். 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் கல்விக்குழு உறுப்பினர் கவுன்சிலர் நிரோஷா தலைமையில் தலைமை யாசிரியர் வணக்கமேரி முன்னிலையில் அரிஸ்டோ வயன்ஸ் தலைவர் ராமராஜ் கொடியேற்றினார். ராம்நகர் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பாதிரியார் அந்தோணிச்சாமி தலைமையில் முதல்வர் பாதிரியார் சூசை மாணிக்கம் முன்னிலையில் கவுன்சிலர் அய்யப்பன் கொடி ஏற்றினார். தேவகோட்டை ஒன்றி யம் நாகமதி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியர் புரட்சிதம்பி தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி கொடி ஏற்றினார். சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் பள்ளி தலைவர் லட்சு மணன் தலைமையில் கல்லூரி பேராசிரியர் பாண்டியராஜன் கொடி ஏற்றினார். ஜெமீந்தார் உயர்நிலைப் பள்ளியில் தலைமை யாசிரியர் வெங்கடேசன் தலைமையில் டாக்டர் ஜெயக்குமார் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள் சித்ரா தேவி பாண்டிச்செல்வி, நர்மதா பங்கேற்றனர். மானாமதுரை * மிளகனுார் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொற்கொடி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,தமிழரசி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். *மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் பாப்பையன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். * மானாமதுரை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., தமிழரசி தேசிய கொடி ஏற்றி வைத்தார். *மானாமதுரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் பூர்ண சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய தரச் சான்றிதழ் பெறுவதற்கான பணிகளை செய்த அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். *மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி பொறியாளர் பட்டுராஜன்,நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். *மானாமதுரை,எம்.கரிசல்குளம் குட்வில் மெட்ரிக் பள்ளிகளில் பள்ளி தாளாளர் பூமிநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். *மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளிகளில் முன்னாள் ராணுவ கேப்டன் மோகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தாளாளர் கிறிஸ்டிராஜ், முதல்வர்கள் வள்ளிமயில், ஜீவிதா, லதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். *மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளிகளில் நிறுவனர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் தாளாளர் கபிலன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகி மீனாட்சி,முதல்வர் சாரதா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். *மானாமதுரை தயாபுரம் வ.உ.சி., தெரு நேஷ னல் பப்ளிக் பள்ளியில் செயலாளர் நடராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.முதல்வர் மீனாட்சி, நிர்வாக அதிகாரி செந்தில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். * தெ.புதுக்கோட்டை எம்.கே.என்., நடுநிலைப் பள்ளியில் தலைவர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற விழாவில் செய லாளர் அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் சிவ குருநாதன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். * மேலநெட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காசிராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர். *மானாமதுரை அருகே பறையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அழகு ஜோதி தேசியக்கொடியை ஏற்றினார். இளையான்குடி *இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.துணைத் தலைவர் இப்ராஹிம், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை,பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். *இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முகமது பாரூக் தேசிய கொடி ஏற்றி வைத்து தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கல்வியியல் கல்லூரியில் தலைவர் அகமது ஜலாலுதீன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் ஜபருல்லாகான், பொருளாளர் அப்துல் அகது,முதல்வர்கள் ஜபருல்லாகான், முகமது முஸ்தபா, ஆட்சி குழு உறுப்பினர் சபினுல்லா கான் மற்றும் பேராசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். * இளையான்குடி கோர்ட்டில் நீதிபதி மணிவர்மன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கோர்ட் ஊழியர்கள், சட்டப் பணிகள் குழுவினர் கலந்து கொண்டனர். * இளையான்குடியில் த.மு.மு.க., சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் துல் கருணை சேட் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிர்வாகிகள்,பொதுமக்கள்,தகவல் தொழில்நுட்ப அணியினர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அம்பலமுத்து கொடியேற்றினார். செயல் அலுவலர் சண்முகம், துணை சேர்மன் செந்தில், கவுன்சிலர்கள் பங்கேற்ற னர். எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் செழியன் கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமணராஜு, அலுவலக பணி யாளர்கள் பங்கேற்றனர். சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அபர்ணா கொடியேற்றினார். வழக்கறிஞர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரி யர் முருகன் தலைமையில் பேரூராட்சித் துணைத் தலைவர் செந்தில் கொடியேற்றினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி சீதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமிர்தலிங்கம், தொழிலதி பர் சுகுமாறன் பங்கேற்றனர். சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் அய்யன்ராஜ் கொடியேற்றினார். டாக்டர்கள் ரவிக்குமார், சத்தியா, புவனேஸ்வரி, முதன்மை செவிலியர் ரோஸ்லின் பங்கேற்றனர். சிங்கம்புணரி எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் முதல்வர் கவுரி சாலமன் தலைமையில், தாளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். பள்ளி செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பாலமுருகன் வரவேற்றார். துணை முதல்வர் பூமி நாதன் பேசினார். குளோபல் இன்டர் நேஷனல் பள்ளியில் தாளாளர் பேராசிரியர் காந்தி தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பிரான்மலை துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கஸ்தூரி கொடியேற்றினார். ஆசிரியர்கள் சரவணன், முத்துப்பாண்டியன், இந்திரா, பெற்றோர்கள் பங்கேற்றனர். புழுதிபட்டி துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ், குன்னத்தூர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், திருவாழ்ந்தூரில் தலைமை ஆசிரியர் ராஜசேகர், கரிசல் பட்டியில் தலைமை ஆசிரி யர் கணேசன், வலசைபட்டியில் தலைமை ஆசிரியர் பொன்னுச்சாமி, படமிஞ்சியில் தலைமை ஆசிரியர் இந்திரா, வெள்ளியங்குடிப்படியில் தலைமை ஆசிரியர் ரவி, முசுண்டபட்டியில் தலைமைஆசிரியர் தாமஸ், கட்டுக்குடிபட்டியில் தலைமையாசிரியர் ராமசாமி, எஸ்.புதூரில் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, கே.புதுப்பட்டியில் தலை மையாசிரியர் நாகலெட்சுமி, கட்டையன்பட்டியில் தலைமையாசிரியர் பருவ தம் தேசியக்கொடியேற்றினர். சிறுமருதூர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார்.