மேலும் செய்திகள்
'மெகா' சைஸ் ரவுண்டானாவால் மக்கள் அவதி
17-Dec-2024
திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சக்குடி விலக்கில் விபத்துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. சிவகங்கை, காளையார்கோயில், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி, தென்காசி, செங்கோட்டை, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல தினசரி ஏராளமானோர் பூவந்தி, சக்குடி வழியாக நான்கு வழிச்சாலை வந்து விரகனுார் ரிங்ரோடு சென்று செல்கின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றன. 24 மணி நேரமும் இப்பாதையில் வாகனப்போக்குவரத்து இயக்கம் உள்ள நிலையில் சக்குடியில் இருந்து வைகை ஆற்றுப்பாலத்தை கடந்து நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் நுழைகின்றன.இந்த இடத்தில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை. மேலும் நான்கு வழிச்சாலை உயரமாகவும், வைகை ஆற்றுப்பாலம் பள்ளமாகவும் இருப்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் நான்கு வழிச்சாலையில் நுழைய வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி இந்த இடத்தில் விபத்து நேரிட்டு வருகின்றன. விபத்துகளை கண்டறிய அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களும் அகற்றப்பட்டு விட்டன. விபத்துகளை தவிர்க்க இந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பதுதான் தீர்வு என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சக்குடி விலக்கில் ரவுண்டானா அமைத்து உயர்மின்கோபுர விளக்குகள் பொருத்தினால் விபத்துகள் தவிர்க்கலாம், எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17-Dec-2024