உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

மானாமதுரை: சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, மானாமதுரையிலும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.இதையடுத்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலும் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., தனுஷ்கோடி தலைமையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை