உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., ஆட்சியில் முடங்கிய  துாய்மை பணியாளர் நல வாரியம் வாரிய மாநில தலைவர் ஆறுச்சாமி பேட்டி  

அ.தி.மு.க., ஆட்சியில் முடங்கிய  துாய்மை பணியாளர் நல வாரியம் வாரிய மாநில தலைவர் ஆறுச்சாமி பேட்டி  

சிவகங்கை:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி யில் துாய்மை பணியாளர் நல வாரியம் செயல்பாடின்றி போனதாக சிவகங்கையில் தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் வி.ஆறுச்சாமி தெரிவித்தார். சிவகங்கையில் அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ரூ.6.04 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டமும், 150 பேருக்கு நலவாரிய அட்டை தந்துள்ளோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டு துாய்மை பணியாளர் நலவாரியம் செயல்பாடின்றி போனது. முதல்வர் ஸ்டாலின் தான் மீண்டும் இந்த வாரியத்தை செயல்படுத்தினார். இந்த நல வாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் என்பதை ரூ.8 லட்சமாக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மை பணியாளர்களுக்கு சம்பள வேறுபாடு உள்ளது. அரசாணை 62 படி துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். கிராம ஊராட்சிகளில் பணிபு ரியும் துாய்மை பணியாளர் மாத சம்பளம் ரூ.5000 யை ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும். செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்ய துாய்மை பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. அது போன்று செயல்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். தனியார் ஒப்பந்ததாரர்கள் அரசு தரும் சம்பளத்தில் ஒவ்வொருவரிடமும் ரூ.100 முதல் 150 வரை பிடித்தம் செய்து தருவதாக புகார் வந்துள்ளது. எனவே அரசாணை 62 ன் படி துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கைவைக்க உள்ளோம். துாய்மை பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் போது அதற்கான உதவி தொகை ரூ.15 லட்சம் தரப்படுகிறது. அதை ரூ.35 லட்சமாக உயர்த்தி வழங்குமா று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு பள்ளி, கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் துாய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1750 வழங்கப் படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை