மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
7 hour(s) ago
பயிற்சி முகாம்
7 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
7 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
7 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
7 hour(s) ago
எஸ்.புதுார்: சிங்கம்புணரி, எஸ்.புதுார் பகுதி அரசுப் பள்ளிகளில் தண்ணீர், சுற்றுச்சுவர் இல்லாமல் மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்ணீரைத் தேடி அலையும் நிலை உள்ளது.இத்தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளும் 100க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தண்ணீர் வசதி முறையாக செய்து தரப்படவில்லை. மேலும் பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் மாணவர்கள் குடிப்பதற்கும் சாப்பிட்டு கை கழுவதற்கும் தண்ணீரைத் தேடி பள்ளிகளை விட்டு வெளியே செல்லும் நிலை உள்ளது.சில பள்ளிகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொட்டி, குழாய்களில் தண்ணீரை பிடித்து வருகின்றனர். குறிப்பாக எஸ்.புதுார் ஒன்றியத்தில் உள்ள எஸ்.புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முழுமையான தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. அங்கு இருக்கும் குடிநீர் தொட்டியும் சில மாதங்களாக செயல்படவில்லை. இதனால் அருகே உள்ள போர்வெல்லில் இருந்து மாணவர்களே ஆபத்தானமுறையில் மின்சார சுவிட்சை இயக்கி குழாயில் ஒழுகும் தண்ணீரை பிடித்து பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஆபத்தான நிலை உள்ளது. மேலும் சில பள்ளிகளில் தண்ணீருக்காக மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் போது விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே அனைத்து பள்ளிகளிலும்குடிநீர் மற்றும் காம்பவுண்ட் சுவர் வசதியை ஏற்படுத்திதர பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago