உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம்

 ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டத்தில் நவ., 18-ஆம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை விளக்கி இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தாலுகா அலுவலகம், இளையான்குடி மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணியாற்றும் அரசுஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் நடைபெற்ற கூட்டத்தில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சேது செல்வம் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்சன் அந்தோணி தாஸ், துரை, பழனிச்சாமி,ஹனிபா, செல்வகுமார், ராஜ்குமார் விஸ்வநாத் பிரதாப் பாண்டியன், வீரபாண்டி,கார்த்திகேயன், சந்திரபோஸ், சத்யராஜ் ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை