உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசின் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது! எச்சரிக்கை

அரசின் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது! எச்சரிக்கை

தை பொங்கலை முன்னிட்டு ஜன., முதல் மே மாதம் வரை மட்டுமே அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்களை நடத்தி கொள்ளலாம்.அந்த வகையில் அனுமதியுடன் 100 க்கணக்கான விழா நடந்தாலும், அனுமதியின்றியும் ஆங்காங்கே மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மே மாதம் வரை மட்டுமே இப்போட்டிகளை நடத்த அனுமதி காலமாக இருந்தாலும், தொடர்ந்து ஆண்டு முழுவதும் ஆங்காங்கே வடமாடு, விரட்டு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜன.,16 முதல் சிறாவயல், கண்டுப்பட்டி, அரளிப்பாறை மட்டுமின்றி ஏராளமான இடங்களில் இப்போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் உரிய அனுமதியை பெற்று, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர், அதிகாரிகளிடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது, விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பே http://www.jallikattu.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அரசிதழில் ஏற்கனவே பதிவு செய்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு மட்டுமே அனுமதி உண்டு.உரிய காப்பீடு (ரூ.1 கோடி) தொகையை காப்பீடு நிறுவனத்திடம் பெற்று, அதனை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் காளைகள் மீது 'ஜிகினா'பவுடர் துாவுதல், கண்ணில் எலுமிச்சை சாறு பிழிதல், எண்ணெய் தடவுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரே தேதியில் விழா நடத்த அனுமதி கேட்டிருந்தால், முதலில் வந்த விண்ணப்பத்திற்கு தான் முன்னுரிமை தரப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை