சங்கராபுரம் நுாலகத்தில் இடவசதியின்றி அவதி
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் செயல்படும் நூலகத்தில் போதிய இடவசதி இன்றி வாசகர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் என்.ஜி.ஓ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் கட்டினர். இங்கு 800 உறுப்பினர்கள் உள்ளனர். 63 புரவலர்கள் உள்ளனர். இங்கு அதிகளவில் வாசகர்கள் வந்து சென்ற போதும், போதிய சேர், மேஜைகள் இருந்தும், அவற்றை பயன்படுத்த இடவசதியில்லை. எனவே நெருக்கடியை தவிர்க்க நுாலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும். நுாலகத்திற்கு அருகே 3.5 சென்ட் அரசு நிலம் உள்ளது. அதை பொது நுாலகத்துறைக்கு வழங்கினால், அங்கு கூடுதல் கட்டடம் கட்டலாம் என தெரிவிக்கின்றனர். //