உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிலம் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி : புரோக்கர் மீது வழக்கு

நிலம் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி : புரோக்கர் மீது வழக்கு

சிவகங்கை : சிவகங்கையில் நிலம் வாங்கிதருவதாக 5 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சிவகங்கை அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் முத்தன்னன் (55). இவரிடம், கூத்தாண்டத்தை சேர்ந்த பரமசிவம் மகன் கோபாலகிருஷ்ணன் நிலம் வாங்கிதருவதாக கூறியுள்ளார். இதற்காக, கடந்த ஆண்டு மே.,21ம் தேதி அண்ணாமலை நகரில் உள்ள இடத்தை காண்பித்து, நிலத்திற்கான தொகை 5 லட்சத்து ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். பணத்தை பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும், நிலத்தை முத்தனன் பெயருக்கு மாற்றிதராமல் ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து கேட்டபோது, வாங்கிய பணத்தையும் தரவில்லை. இதையடுத்து, முத்தன்னன், சிவகங்கை போலீசில் புகார் செய்தார். பணம் பெற்று மோசடி செய்த, ரியல்எஸ்டேட் புரோக்கரை, இன்ஸ்பெக்டர் சங்கர், வடிவேல்முருகன் எஸ்.ஐ., தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை