மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன?
04-Dec-2024
வங்கக் கடலில் உருவான புயல் நவ. 30 ல் கரையை கடந்த போது திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழையை கொட்டித் தீர்த்தது. அப்போது திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையில் கிழக்குப் பக்கத்தில் வ.உ.சி., நகர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் புதைந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பிரான்மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள அசரீரி விழுந்தான் மலைப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மலைகளை ஆய்வு செய்து கூடுதல் மரக்கன்றுகளை நட இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இப்பகுதியில் 2005ம் ஆண்டு பெய்த கனமழையின் போது இங்குள்ள அசரீரி விழுந்தான் மலையில் மேலவண்ணாரிருப்பு அருகே 1000 அடி உயரத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு அடிவாரம் வரை பெரிய பள்ளம் உருவானது. அதிர்ஷ்டவசமாக கீழேயிருந்த வீடுகளுக்கும், அவற்றில் வசித்தவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் தப்பினர்.இப்பகுதி மலைகளில் கோடையில் ஏராளமான மரங்கள் பட்டு போகும் நிலையில் அந்த இடங்களில் மண்ணின் இறுக்கம் குறைகிறது. வனத்துறையினர் அடிவாரப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தாலும், உச்சியில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்பகுதியில் கனமழை தொடர்ச்சியாக பெய்யும் பட்சத்தில் மலைகளில் மீண்டும் மண் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதுமேலும் பிரான்மலை அருகே சில இடங்களில் தனியார் மண், கல்குவாரிகள் உள்ள நிலையில் அப்பகுதியிலும் மண்சரிவு ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். எனவே பிரான்மலைப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒட்டுமொத்தமாக கல், மண் குவாரிகள் இயங்குவதை தடை செய்வதுடன், மலை முழுவதும் மர விதைகளை தூவியும், மரக்கன்றுகளை அதிக அளவில் நடவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
04-Dec-2024