உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சட்டக்கல்லுாரி கட்டட அடிக்கல் நாட்டு விழா

சட்டக்கல்லுாரி கட்டட அடிக்கல் நாட்டு விழா

காரைக்குடி : காரைக்குடியில் அரசு சட்டக் கல்லுாரிக்கு கட்டட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. காரைக்குடியில் 2022 ஆண்டு சட்டக் கல்லுாரி தொடங்கப்பட்டது.அழகப்பா இன்ஜி., கல்லூரியில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக கல்லுாரி செயல்பட்டு வருகிறது. சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்ட 19.16 ஏக்கரில் ரூ.100.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், ப.சிதம்பரம் எம்.பி., கார்த்தி எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, கலெக்டர் ஆஷா அஜித், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக் கல்வித்துறை இயக்குநர் விஜயலெட்சுமி கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ