வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் நேற்று சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தங்களது பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செயலாளர் சித்திரைசாமி தலைமை வகித்தார். பொருளாளர் வல்மீகிநாதன், இணை செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, வழக்கறிஞர்கள் ராஜசேகரன், மருது, மதி, இளையராஜா, முத்துபாண்டி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.