உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறு, குறு தொழில் நிறுவனம் சார்பில் ‛லீன் திட்ட கருத்தரங்கு

சிறு, குறு தொழில் நிறுவனம் சார்பில் ‛லீன் திட்ட கருத்தரங்கு

சிவகங்கை ; சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் 'லீன்' திட்டம் மூலம் செலவு, விரையத்தை குறைத்து லாபம் ஈட்டும் தொழில்நுட்ப கருத்தரங்கு சிவகங்கையில் நடந்தது.சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் நடந்த கருத்தரங்கிற்கு மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன உதவி இயக்குனர் ஆர்.உமா சந்திரிகா வரவேற்றார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் டி.கண்ணன் தலைமை வகித்தார். வேளாண்மை வணிக துணை இயக்குனர் பி.தமிழ்செல்வி துவக்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர் சங்க தலைவர் கஸ்பார், செயலாளர் கண்ணப்பன், தேசிய சிறு தொழில் நிறுவன துணை இயக்குனர் வனிதா, முத்துப்பட்டி பைசஸ் நறுமண பூங்கா மேலாளர் மோகன் உட்பட தொழில் முனைவோர் பங்கேற்றனர்.'லீன்' திட்டம் குறித்து ஆலோசகர் என்.செந்தில்பிரபு ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை