உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எல்.ஐ.சி., ஊழியர் சங்க  மக்கள் சந்திப்பு கூட்டம் 

எல்.ஐ.சி., ஊழியர் சங்க  மக்கள் சந்திப்பு கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் எல்.ஐ.சி., ஊழியர் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மக்களை சந்தித்து விளக்க நோட்டீஸ் வழங்கினர்.எல்.ஐ.சி., ஊழியர் சங்க தலைவர் கர்ணன்தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் துவக்கிவைத்தார்.எல்.ஐ.சி., ஏஜன்ட் இந்திய கூட்டமைப்பின்(லியாபி) தலைவர் பன்னீர்செல்வம், கார்த்திகேயன், செயலாளர் மணிகண்டன், எல்.ஐ.சி., ஏஜன்ட்(லிகாய்) இந்திய அமைப்பின் செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் மக்களிடம் நோட்டீஸ் வழங்கி, விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !