உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது

சிவகங்கை; சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகின்றனர். வார்டுகள் தரைத்தளம் முதல், 2ம் தளம் வரை உள்ளன. மேல்தளத்திற்கு நோயாளிகள், டாக்டர்கள், பணியாளர்கள் சென்று வர 7 லிப்ட்கள் உள்ளன. இதில் 4 மட்டுமே இயங்குகின்றன. 3 லிப்ட் நீண்ட நாட்களாக பழுதாகியுள்ளது. உணவு, மருத்துவப் பொருள் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட லிப்ட்டும் பழுதடைந்துள்ளது. நோயாளிகள் சிகிச்சைக்கு தரைத்தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ