உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொது கழிப்பறைக்கு பூட்டு

பொது கழிப்பறைக்கு பூட்டு

சிவகங்கை : சிவகங்கை நகர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே உள்ள பொது கழிப்பறை பூட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிவகங்கை நகர் ராமச்சந்திரா பூங்கா அருகே உள்ளது அரசு தாய் சேய் நல மருத்துவமனை. இதற்கு அருகில் காந்தி வீதியில் சிவகங்கை நகராட்சி சார்பில் பொது கழிப்பறை கட்டடம் உள்ளது. இந்தப் பகுதி கடைகள் நிறைந்த பகுதி. அருகில் தான் வாரச்சந்தை இயங்கி வருகிறது. சந்தைக்கு 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகின்றனர். அதேபோல் கிராமங்களில் இருந்தும் நகரில் இருந்தும் சந்தையில் காய்கறி வாங்குவதற்கு பலர் கூடுகின்றனர். சந்தைக்கு வரும் வியாபாரிகள், கடைவீதி, அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அவசரத்திற்கு இந்த பொது கழிப்பறையைத்தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பொது கழிப்பறயை பூட்டு போட்டு பூட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை